வாரச்சந்தையில் கொரோனா விழிப்புணர்வு
வாரச்சந்தையில் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
லாலாபேட்டை
கரூர் மாவட்டம் லாலாபேட்டை அருகே பழைய ஜெயங்கொண்டம் பேரூராட்சியில் நேற்று வாரச்சந்தை நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் தக்காளி, கத்தரிக்காய், முள்ளங்கி, கீரைகள் உள்ளிட்டவற்றை விற்பனை செய்து வருகின்றனர். இதனை பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து வாங்கி சென்றனர். தற்போது கொரோனா பரவல் அதிகம் இருப்பதால் லாலாபேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையிலான போலீசார் சந்தைக்கு வந்தனர்.
அப்போது ஒலிப்பெருக்கி மூலம் அனைவரும் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், வீடுகளுக்கு சென்றவுடன் கைககளை சோப்பு போட்டு கழுவ வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் முககவசம் அணியாதவர்களை எச்சரிக்கை செய்து முககவசம் வழங்கினர்.
Related Tags :
Next Story