காரைக்குடி,
காரைக்குடி அருகே கோட்டையூர் பேரூராட்சி பகுதிகளில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க சுகாதார நடவடிக்கைகளை முழுவீச்சில் செயல்படுத்தி வருகின்றது.. இந்த நிலையில் ஸ்ரீராம் நகரில் உள்ள ஒரு தனியார் தையல் தொழிற் பயிற்சி நிலையம் கொரோனா விதிமுறைகளை மீறி செயல்படுவதாக தெரிய வந்தது. இதையடுத்து தாசில்தார் அந்தோணிராஜ்அறிவுறுத்தலின் பேரில் செயல் அலுவலர் கவிதா பயிற்சி மையம் சென்று ஆய்வு மேற்கொண்டு விதிமீறலுக்காக பயிற்சி நிலையத்திற்கு அபராதம் விதித்தார். மேலும் மறு உத்தரவு வரும் வரை பயிற்சி நிலையத்தை மூட உத்தரவிட்டார்.