ஓடும் கார் தீப்பிடித்து எரிந்தது


ஓடும் கார் தீப்பிடித்து எரிந்தது
x
தினத்தந்தி 22 April 2021 11:37 PM IST (Updated: 22 April 2021 11:37 PM IST)
t-max-icont-min-icon

தேவகோட்டை அருகே ஓடும் கார் தீப்பிடித்து எரிந்தது. இதில் 4 பேர் உயிர் தப்பினர்.

தேவகோட்டை,

திருவாடானை அருகே உள்ள அஞ்சுகோட்டையைச் சேர்ந்தவர் ஷேக்ஆசிப்கான் (வயது 23). இவர் நேற்று உறவினர்களுடன் ஒரு காரில் மதுரை ஆஸ்பத்திரிக்கு சென்று கொண்டிருந்தார்.தேவகோட்டை தாலுகா வெண்ணியூர் விலக்கு அருகே சென்ற போது காரில் இருந்து புகை வந்தது. இதனால் ஓரமாக காரை நிறுத்திவிட்டு அனைவரும் கீழே இறங்கினர். அப்போது கார் தீப்பிடித்து மளமளவென எரியத் தொடங்கியது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருவாடானை தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.புகை வந்தவுடன் காரை உடனடியாக நிறுத்தியதால் அந்தக் காரில் இருந்த 4 பேரும் உயிர் தப்பினர்.
இது குறித்து திருவேகம்பத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story