என்ஜினீயர் கொலை


என்ஜினீயர் கொலை
x
தினத்தந்தி 22 April 2021 11:37 PM IST (Updated: 22 April 2021 11:51 PM IST)
t-max-icont-min-icon

என்ஜினீயர் கொலை செய்யப்பட்டார்.

மேலூர்,

மேலூர் அருகே சிவகங்கை ரோட்டில் உள்ள பெருமாள்பட்டியை சேர்ந்தவர் மரைக்காயர். இவரது மகன் அஜீஸ்(வயது 27). இவர் கெமிக்கல் என்ஜினீயரிங் படித்தவர். இவர்களது வீட்டின் அருகே வசிப்பவர் சச்சிதானந்தம்(60). இவர்கள் இரு குடும்பத்துக்கும் இடையே இடப்பிரச்சினை இருந்து வந்தது. இதுதொடர்பாக அவர்கள் இடையே அடிக்கடி தகராறும் ஏற்பட்டு வந்தது. இந்தநிலையில் நேற்று மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது அஜீசை தாக்கினர். இதில் அவர் படுகாயமடைந்தார். அவரை சிகிச்சைக்காக மேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் கொண்டு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்துபோனார். இதுகுறித்து சச்சிதானந்தம், ராமு, ராஜா உள்பட பலர் மீது மேலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story