மின்வாரிய அதிகாரி, மனைவி, மகள் மீது தாக்குதல்


மின்வாரிய அதிகாரி, மனைவி, மகள் மீது தாக்குதல்
x
தினத்தந்தி 22 April 2021 11:41 PM IST (Updated: 22 April 2021 11:41 PM IST)
t-max-icont-min-icon

தேவகோட்டையில் மின்வாரிய அதிகாரி, மனைவி, மகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இது தொடர்பாக 8 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து உள்ளனர்.

தேவகோட்டை,

தேவகோட்டை ராமலிங்கம் நகரில் வசித்து வருபவர் செல்வம் (வயது 54). மின்பொறியாளர். இவரது எதிர் வீட்டை சேர்ந்தவர் சங்கரலிங்கம். இவர் நாகலாந்தில் மத்திய பாதுகாப்பு படையில் பணிபுரிந்து வருகிறார். சமீபத்தில் தனது மகன் இறந்ததால் ஊருக்கு வந்திருந்தார். செல்வம் தனது வீட்டின் கார்னரில் கடையை கட்டி வாடகைக்கு விட்டிருக்கிறார். அந்த கடைக்கு இரண்டு பக்கமும் வாசல் உள்ளது.அதில் ஒரு வாசலைத் திறந்தால் சங்கரலிங்கம் வீட்டின் பகுதி தெரியவரும். இதனால் சங்கரலிங்கம் மனைவி காளியம்மாள் அந்த கடையின் ஒரு பக்க கதவை அடைத்துவிட்டு கடை நடத்துமாறு கூறியுள்ளார். இது தொடர்பாக அவர்களுக்கு முன்விரோதம் இருந்து வந்தது.இந்த நிலையில் நேற்று இரவு செல்வம் வீட்டிற்குள் புகுந்து அவரையும், அவரது மனைவி சத்யா(42), மகள் ேலாகஸ்ரீ(19) தாக்கியதாக தெரிகிறது.
இது குறித்து செல்வம் தேவகோட்டை நகர போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மைக்கேல் வழக்கு பதிவு செய்து சங்கரலிங்கம், அவரது மனைவி காளியம்மாள், மகள் பிரவீனா, மற்றும் நல்லிவயல் லட்சுமணன், உதையாச்சி செல்லம், பிரதீப், சூர்யா, செம்பொன்மாரி பிரதீப் ஆகிய 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



Next Story