கொரோனா தடுப்பூசி போடுவதால் பக்க விளைவுகள் ஏற்படாது-மருத்துவ அதிகாரி தகவல்
ெகாரோனா தடுப்பூசி போடுவதால் பக்க விளைவுகள் ஏற்படாது. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்று மானாமதுரை அரசு மருத்துவமனையின் மருத்துவ அதிகாரி ஜீவா ரத்தினம் கூறினார்.
மானாமதுரை,
ெகாரோனா தடுப்பூசி போடுவதால் பக்க விளைவுகள் ஏற்படாது. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்று மானாமதுரை அரசு மருத்துவமனையின் மருத்துவ அதிகாரி ஜீவா ரத்தினம் கூறினார்.
கொரோனா அதிகரிப்பு
இந்த நிலையில் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி ேபாடப்பட்டு வருகிறது.மானாமதுரை அரசு ஆஸ்பத்திரியிலும் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது. இது குறித்து மருத்துவ அதிகாரி டாக்டர் ஜீவாரத்தினம் கூறியதாவது:-
பக்கவிளைவுகள் ஏற்படாது
கொரோனாவை தடுப்பதற்காக45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ள அரசு அறிவுறுத்தி உள்ளது. இருப்பினும் பெரும்பாலான பொதுமக்களிடம் தடுப்பூசி போட்டு கொள்வதில் ஆர்வம் இல்லை.
பொதுமக்கள் அச்சமின்றி அரசு மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்.ரத்த கொதிப்பு, சர்க்கரை நோய், இதய நோய் உள்ளவர்களும் கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ளலாம். கொரோனா தடுப்பூசி போட்டு கொள்வதால் எந்த பக்கவிளைவுகளும் வராது. இந்த தடுப்பூசி போட்டு கொள்வதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இதுவரை மானாமதுரை அரசு ஆஸ்பத்திரியில் 300-க்கும் மேற்பட்டோர் கொரோனா தடுப்பூசி போட்டு உள்ளனர். அவர்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை இல்லை. எனவே பொதுமக்கள் வந்து தடுப்பூசி போட்டு கொண்டு கொரோனாவில் இருந்து மீளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story