தொப்பூர் கணவாயில், கிரானைட் லோடு ஏற்றிச்சென்ற லாரியின் கன்டெய்னர் கவிழ்ந்ததில் டிரைவர் உடல் நசுங்கி பலி


தொப்பூர் கணவாயில், கிரானைட் லோடு ஏற்றிச்சென்ற லாரியின் கன்டெய்னர் கவிழ்ந்ததில் டிரைவர் உடல் நசுங்கி பலி
x
தினத்தந்தி 22 April 2021 11:53 PM IST (Updated: 22 April 2021 11:53 PM IST)
t-max-icont-min-icon

தொப்பூர் கணவாயில் கிரானைட் லோடு ஏற்றிச்சென்ற லாரியின் கன்டெய்னர் கவிழ்ந்த விபத்தில் இடிபாடுகளில் சிக்கி டிரைவர் பரிதாபமாக இறந்தார்.

நல்லம்பள்ளி:
தொப்பூர் கணவாயில் கிரானைட் லோடு ஏற்றிச்சென்ற லாரியின் கன்டெய்னர் கவிழ்ந்த விபத்தில் இடிபாடுகளில் சிக்கி டிரைவர் பரிதாபமாக இறந்தார்.
லாரி கவிழ்ந்தது
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் இருந்து தூத்துக்குடி மாவட்டத்திற்கு கிரானைட் கற்கள் பாரம் ஏற்றிக்கொண்டு ஒரு கன்டெய்னர் லாரி சென்று கொண்டிருந்தது. இந்த லாரி, தர்மபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் வழியாக நேற்று அதிகாலை வந்தது. 
லாரியை ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த சரத்குமார் (வயது 26) என்பவர் ஓட்டி வந்தார். கன்டெய்னர் லாரி, தொப்பூர் கணவாய் முதல் வளைவை கடந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடியது. 
பின்னர் தேசிய நெடுஞ்சாலையின் நடுவில் உள்ள தடுப்புச்சுவரில் மோதி கன்டெய்னர் பாரம், லாரியின் முன்பு இருந்த டிரைவர் கேபின் மீது வேகமாக மோதி கவிழ்ந்தது. 
டிரைவர் சாவு
இந்த விபத்தில் இடிபாடுகளில் சிக்கி டிரைவர் சரத்குமார் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார். விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த தொப்பூர் போலீசார் மற்றும் சுங்கசாவடி ரோந்து படையினர், விபத்தில் சிக்கி இறந்து கிடந்த டிரைவர் சரத்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 
இந்த விபத்தால் தர்மபுரி-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் அந்த லாரி சாலையோரம் அகற்றப்பட்டு போக்குவரத்து சீரானது. 
இந்த விபத்து குறித்து தொப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story