பொதுப்பணித்துறை என்ஜினீயர், மனைவி மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு


பொதுப்பணித்துறை என்ஜினீயர், மனைவி மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு
x
தினத்தந்தி 22 April 2021 6:28 PM GMT (Updated: 22 April 2021 6:28 PM GMT)

பொதுப்பணித்துறை என்ஜினீயர், மனைவி மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்

மதுரை
மதுரை தல்லாகுளம் பகுதியில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகத்தில் பெரியார் பாசன கால்வாய் திட்ட பணியில் தலைமை பொறியாளராக பணியாற்றியவர் சுப்பிரமணி. இவரது மனைவி ராஜேஸ்வரி. இவர்களுக்கு 2 மகள், 1 மகன் உள்ளனர். மூன்று பேரும் டாக்டராக உள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த சுப்பிரமணி கடந்த 1987-ம் ஆண்டு பணியில் சேர்ந்தார். பின்னர் 2011-ம் ஆண்டு அவரது சொத்து மதிப்பு சுமார் 51 லட்சமாக இருந்தது. ஆனால் 2018-ம் ஆண்டு அவரது சொத்து மதிப்பு 1 கோடிக்கு மேல் 223 சதவீதம் உயர்ந்துள்ளதாகவும், அவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாகவும் புகார் எழுந்தது. இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தினர். அதில் சுப்பிரமணி, அவரது மனைவி பெயரில் அந்த காலக்கட்டத்தில் வீடுகள், வீட்டு மனை, வாகனங்கள் என ஏராளமான சொத்துகள் வாங்கியது கண்டுபிடிக்கப்பட்டது.
அதன் அடிப்படையில் மதுரை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக சுப்பிரமணி, அவரது மனைவி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story