சமூக இடைவெளியை பின்பற்றாத 10 பேருக்கு அபராதம்


சமூக இடைவெளியை பின்பற்றாத 10 பேருக்கு அபராதம்
x
தினத்தந்தி 22 April 2021 11:59 PM IST (Updated: 22 April 2021 11:59 PM IST)
t-max-icont-min-icon

சமூக இடைவெளியை பின்பற்றாத 10 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

மணமேல்குடி
மணமேல்குடியை அடுத்த கட்டுமாவடியில் பெரிய மீன் மார்க்கெட் உள்ளது. இந்த மீன் மார்க்கெட்டிற்கு விசைப்படகு மற்றும் நாட்டுப்படகுகள் மூலம் பிடிக்கப்படும் மீன்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. தற்போது கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருவதால் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் முககவசம் கட்டாயம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்று அரசு அறிவுறுத்தி உள்ளது. இதனை மீறுபவர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் மணமேல்குடி வருவாய் ஆய்வாளர் காமராஜ் தலைமையில் அழகன்வயல் கிராம நிர்வாக அலுவலர் விஜயன் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் கொண்ட குழுவினர் கட்டுமாவடி மீன் மார்க்கெட்டிற்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கு முககவசம் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றாத மீன் ஏலக்கடை ஊழியர்கள் 10 பேருக்கு தலா ரூ.500 வீதம் அபராதம் விதித்தனர்.


Next Story