கோவை மாநகரில்தான் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரிப்பு


கோவை மாநகரில்தான் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரிப்பு
x
தினத்தந்தி 23 April 2021 12:20 AM IST (Updated: 23 April 2021 12:20 AM IST)
t-max-icont-min-icon

கோவை மாவட்டத்தில் கோவை மாநகரில் தான் கொரோனா தாக்கம் தொடர்ந்து 60 சதவீதத்துக்கு மேல் அதிகரித்து வருகிறது.

கோவை 

கோவை மாவட்டத்தில் கோவை மாநகரில் தான் கொரோனா தாக்கம் தொடர்ந்து 60 சதவீதத்துக்கு மேல் அதிகரித்து வருகிறது.

கொரோனா பரவல்

கோவை மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா அதிகரித்து வருகிறது. மாவட்டத்திலேயே கோவை மாநகரில் மக்கள் அடர்த்தி அதிகம் இருப்பதால் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது மாவட்டத்தில் கோவை மாநகரில் மட்டும் 60 சதவீதம் அளவுக்கு உள்ளது.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கோவையில் தினமும் 600- க்கும் அதிகமாக இருந்தது. இதேபோல் தற்போது கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது.

476 பேர் சாவு

மாவட்டம் முழுவதும் இதுவரை 710 பேர் கொரோனாவினால் இறந்துள்ளனர். இதில் கோவை மாநகரில் மட்டும் 476 பேர் இறந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 கோவை மாவட்டத்தில்  689 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டது. இதில் 473 பேர் மட்டும் கோவை நகரை சேர்ந்தவர் கள்.கோவையில் 43 ஆயிரத்து 160 பேர் பாதிக்கப்பட்டு இதுவரை 39 ஆயிரத்து 461பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.

 தற்போது கோவையை சேர்ந்தவர்கள் 2,561 பேர் மருத்துவமனையிலும், 662 பேர் வீடுகளிலும் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

அதிகம் உள்ள பகுதிகள்

கோவை மாநகரில் துடியலூர், சரவணம்பட்டி உள்ளிட்ட வடக்கு பகுதியில் பரவல் அதிகரித்து வருகிறது. 

அதே போல் தெற்கு பகுதியான குனியமுத்தூர், போத்தனூர் பகுதி மற்றும் கிழக்கு பகுதியான சிங்காநல்லூர், சின்னியம்பாளையம் என தாக்கம் அதிகம் உள்ள பகுதிகளாகும். 

கோவை மாவட்டத்தில் கோவை, துடியலூர், சூலூர் பகுதிகளில் பரவல் அதிகரித்து இருப்பதாகவும், மற்ற பகுதிகளில் 3 சதவீதம் மட்டுமே பரவல் இருப்பதாகவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story