திருப்பூர் வாக்கு எண்ணும் மையத்தில் படையெடுக்கும் பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துகளால் அங்கு பணியில் ஈடுபட்டுள்ள போலீசார், அரசியல் கட்சியினர் அச்சமடைந்துள்ளனர்.
திருப்பூர் வாக்கு எண்ணும் மையத்தில் படையெடுக்கும் பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துகளால் அங்கு பணியில் ஈடுபட்டுள்ள போலீசார், அரசியல் கட்சியினர் அச்சமடைந்துள்ளனர்.
திருப்பூர்
திருப்பூர் வாக்கு எண்ணும் மையத்தில் படையெடுக்கும் பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துகளால் அங்கு பணியில் ஈடுபட்டுள்ள போலீசார், அரசியல் கட்சியினர் அச்சமடைந்துள்ளனர்.
வாக்கு எண்ணும் மையம்
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிக்கான தேர்தல் கடந்த 6-ந்தேதி நடந்து முடிந்து உள்ளது. வருகிற மே மாதம் 2-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில் வாக்கு பதிவு எந்திரங்கள் அனைத்தும் திருப்பூர் பல்லடம் ரோடு, எல்.ஆர்.ஜி. மகளிர் கல்லூரியில் வைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது.
அங்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு, சுழற்சி முறையில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர், மற்றும் போலீசார் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், தினமும் வேட்பாளர்கள், ஏராளமான அரசியல் கட்சியினர், வாக்கு எண்ணும் மையத்திற்கு வந்து செல்கின்றனர்.
பாம்புகள் படையெடுப்பு
இந்த நிலையில் வாக்கு எண்ணும் மையமான எல்.ஆா்.ஜி. கல்லூரியில் பாம்பு புகுந்ததால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், இங்கு இதுபோல் அடிக்கடி பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்களின் படையெடுப்பது அதிகமாக உள்ளது என அங்கு பணியில் ஈடுபட்டுள்ளவர்களும், அரசியல் கட்சி பிரமுகர்களும் அச்சம் தெரிவித்துள்ளனர்.
கல்லூரி வளாகம் முழுவதும் புதர்கள் அடர்ந்து காணப்படுவதாலும், பகலில் வெயிலும், இரவில் மழை பெய்வதுமான சீதோஷண நிலை உள்ளதாலும் அதிகளவில் இங்கு விஷ ஜந்துகள் நடமாட்டம் உள்ளது. இதை கட்டுப்படுத்தி இங்கு பணியில் ஈடுபடுபவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்
Related Tags :
Next Story