விவசாயம் செழிக்க சிறப்பு பூஜை


விவசாயம் செழிக்க சிறப்பு பூஜை
x
தினத்தந்தி 23 April 2021 12:42 AM IST (Updated: 23 April 2021 12:42 AM IST)
t-max-icont-min-icon

வேடசந்தூரில் விவசாயம் செழிக்க சிறப்பு பூஜை நடந்தது.

வேடசந்தூர்:

வேடசந்தூரில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகம் மற்றும் மத்திய புகையிலை ஆராய்ச்சி நிலையத்தில் விவசாய மண்ணுக்கு சிறப்பு பூஜை நடந்தது.

 இதற்கு இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகம் மற்றும் மத்திய புகையிலை ஆராய்ச்சி நிலைய தலைவர் பொன்.மணிவேல் தலைமை தாங்கினார். தொழில்நுட்ப பண்ணை மேலாளர் ராஜேந்திரன் வரவேற்றார்.

இதனைத்தொடர்ந்து பல்வேறு கிராமங்களில் இருந்து விவசாயிகள் தங்களின் நிலங்களில் இருந்து கொண்டு வந்த மண்ணை கலசத்தில் வைத்து விவசாயம் செழிக்க சிறப்பு பூஜையை நடத்தினர்.

 இதனைத்தொடர்ந்து பூச்சி மருந்து, ரசாயன உரம் ஆகியவற்றிற்கு மாற்றாக பஞ்சகவ்யம், ஜீவாம்ருதம் பயன்படுத்துவேன். 

இயற்கை விவசாயத்தின் மூலம் உற்பத்தியாகும் உணவு பொருட்களை மட்டும் பயன்படுத்த முயற்சி செய்வேன். இதன் மூலம் இயற்கை விவசாயத்தை உயிர் பெறச் செய்வேன் என்று விவசாயிகள் உறுதிமொழி ஏற்றனர்.

Next Story