பெரம்பலூர் வக்கீல்கள் சங்கத்தினர் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட முடிவு


பெரம்பலூர் வக்கீல்கள் சங்கத்தினர் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட முடிவு
x
தினத்தந்தி 23 April 2021 1:48 AM IST (Updated: 23 April 2021 1:48 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூர் வக்கீல்கள் சங்கத்தினர் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.

பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் பகுதியில் நேற்று புதிதாக திறக்க இருந்த மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் வருகிற 27-ந்தேதி திறக்கப்பட உள்ளது. அந்த நீதிமன்றத்தை திறக்கும் முடிவினை உயர்நீதிமன்றம் கைவிடக்கோரி கடந்த 9-ந்தேதி முதல் பெரம்பலூர் வக்கீல்கள் சங்கத்தை சேர்ந்த வக்கீல்கள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டு வந்தனர். மேலும் அவர்கள் அதே கோரிக்கையை வலியுறுத்தி கடந்த 16-ந்தேதி உண்ணாவிரத போராட்டத்திலும், 19, 21-ந்தேதிகளில் கண்டன ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் பெரம்பலூர் வக்கீல்கள் சங்கத்தின் அவசர நிர்வாக குழு கூட்டம், நேற்று சங்க தலைவர் வள்ளுவன்நம்பி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் குன்னத்தில் புதிதாக மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் திறப்பதை உயர்நீதிமன்றம் கைவிட வலியுறுத்தி இன்று (வெள்ளிக்கிழமை) முதல் வருகிற 27-ந்தேதி வரை பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் நீதிமன்ற பணியில் இருந்து விலகி இருப்பது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Next Story