கேரளாவில் இருந்து குமரிக்கு வருபவர்களுக்கு கடும் கட்டுப்பாடு
கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் கேரளாவில் இருந்து குமரிக்கு வருபவர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. எல்லையில் சாலைகளை அடைத்தும் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
களியக்காவிளை,
கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் கேரளாவில் இருந்து குமரிக்கு வருபவர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. எல்லையில் சாலைகளை அடைத்தும் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
எல்லையில் தீவிர சோதனை
கேரளாவில் தினசரி பாதிப்பு 20 ஆயிரத்தை தாண்டியது. இதனால் குமரி-கேரள எல்லையான களியக்காவிளை சோதனைச்சாவடியில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளனர்.
கேரளாவில் இருந்து குமரிக்கு வரும் பயணிகள் இ-பாஸ் வைத்திருக்கிறார்களா? என்ற சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகிறார்கள். மேலும் அவர்களுக்கு கொரோனா பரிசோதனையும் செய்யப்படுகிறது.
18 சாலைகள்
இந்த கெடுபிடியால் கேரளாவில் இருந்து வரும் சிலர் குமரி மாவட்டத்துக்குள் நுழைய மாற்றுப்பாதையை பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதன் காரணமாக குமரி மாவட்டத்தில் கொரோனா வேகமாக பரவ வாய்ப்பு உள்ளதாக கருதப்பட்டது. கேரளாவில் இருந்து குமரிக்கு வர 30 சாலைகள் உள்ளன. இதில் 12 பிரதான சாலைகளில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 18 சிறிய சாலைகள் வழியாக கேரளாவில் இருந்து வரும் பயணிகளை தடுக்க போலீசார் மற்றும் சுகாதார துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
அடைப்பு
முதற்கட்டமாக பனச்சமூடு-புலியூர் இணைப்பு சாலை வழியாக வாகனங்கள் வரமுடியாதபடி தடுப்பு வேலிகள் வைத்தும், ஜல்லிகள் கொட்டப்பட்டும் சாலை அடைக்கப்பட்டது. இந்த நடவடிக்கைக்கு கேரள எல்லையில் உள்ள மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.
Related Tags :
Next Story