வெவ்வேறு சம்பவங்களில் டிப்ளமோ என்ஜினீயர் உள்பட 3 பேர் தற்கொலை
நெல்லையில் வெவ்வேறு சம்பவங்களில் டிப்ளமோ என்ஜினீயர் உள்பட 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
நெல்லை:
நெல்லை மேலப்பாளையம் அருகே உள்ள நாகம்மாள்புரத்தைச் சேர்ந்தவர் முருகன். இவருடைய மகன் ஸ்ரீதரன் (வயது 18). இவர் டிப்ளமோ என்ஜினீயரிங் படித்துள்ளார். இவர் தனது பெற்றோரிடம் தனக்கு மோட்டார் சைக்கிள் வாங்கித் தரும்படி கேட்டு உள்ளார். ஆனால் பெற்றோர் அதற்கு மறுத்ததாக கூறப்படுகிறது. இதில் மனமுடைந்து காணப்பட்ட ஸ்ரீதரன் நேற்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து மேலப்பாளையம் போலீஸ் சப் - இன்ஸ்பெக்டர் ஷேக் அப்துல் காதர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
தச்சநல்லூர் மேலகரை அருகே உள்ள ெரயில்வே தண்டவாளம் அருகே ஆண் ஒருவர் பிணமாக கிடப்பதாக நேற்று தச்சநல்லூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் இறந்து கிடந்தவர் ராதாபுரத்தை சேர்ந்த முருகன் (55) என்பதும், விவசாயியான அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாளையங்கோட்டை நேச நயினார் தெருவைச் சேர்ந்தவர் கணேசன் (58). இவர் கொக்கிரகுளம் மின்வாரிய அலுவலகத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவர் சம்பவத்தன்று தனது வீட்டில் வைத்து திடீரென விஷம் குடித்து மயங்கி கிடந்தார். உடனே உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி கணேசன் நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story