நெல்லையில் பகல் நேரத்தில் வாகன போக்குவரத்து அதிகரிப்பு
இரவு நேர ஊரடங்கு காரணமாக நெல்லையில் பகல் நேரத்தில் வாகன போக்குவரத்து அதிகரித்து உள்ளது.
நெல்லை:
தமிழகத்தில் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இதேபோல் நெல்லை மாவட்டத்திலும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதையொட்டி தமிழகத்தில் மீண்டும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது.
முதல்கட்டமாக இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. இரவு 9 மணி முதல் அதிகாலை 4 மணி வரை வாகனங்கள் போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. பொதுமக்களும் வெளியே நடமாட தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதையொட்டி பொதுமக்கள் இரவில் எங்கேயும் செல்லாமல் பகல் நேரத்திலேயே தங்களது பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் நெல்லையில் பகல் நேர வாகன போக்குவரத்து வழக்கத்தைவிட அதிகரித்துள்ளது.
நெல்லை டவுன், சந்திப்பு, வண்ணார்பேட்டை ரவுண்டானா, பாளையங்கோட்டை மார்க்கெட், புதிய பஸ் நிலையம், கடைவீதி பகுதிகளில் பகல் நேரத்தில் பொதுமக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. நேற்று பகலில் வெயில் சுட்டெரித்த போதிலும் பொதுமக்கள் தங்களது பணிகளை பகல் நேரத்திலேயே முடித்துக் கொண்டனர். கடைகளுக்கு சரக்குகளை பகல் நேரத்திலேயே கொண்டுவந்து இறக்குகிறார்கள். இதேபோல் மார்க்கெட் பகுதியில் இருந்து வெளியூர்களுக்கு சரக்குகளை பகல் நேரத்திலேயே ஏற்றிச் செல்கின்றனர்.
Related Tags :
Next Story