பவானிசாகரில் 5 பயிற்சி துணை போலீஸ் சூப்பிரண்டுகளுக்கு கொரோனா
பவானிசாகர் அரசு அலுவலர் பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெற்று வந்த 5 துணை போலீஸ் சூப்பிரண்டுகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
பவானிசாகர்
பவானிசாகர் அரசு அலுவலர் பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெற்று வந்த 5 துணை போலீஸ் சூப்பிரண்டுகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
அலுவலர் பயிற்சி நிலையம்
தமிழ்நாடு நிர்வாக சீர்திருத்தம் மற்றும் பணியாளர் நலன் துறை சார்பில் பவானிசாகரில் அரசு அலுவலர் பயிற்சி நிலையம் செயல்பட்டு வருகிறது.
இந்த பயிற்சி நிலையத்தில் தமிழக அரசின் அனைத்து துறை சார்ந்த இளநிலை உதவியாளர்கள், உதவியாளர்கள், துணை தாசில்தார்கள், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் உள்ளிட்ட பல்வேறு நிலையில் உள்ள அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது போலீஸ் துறையில் பணிபுரியும் 25 துணை போலீஸ் சூப்பிரண்டுகளுக்கு 1½ மாத காலம் பயிற்சி நடைபெற்று வந்தது.
5 பயிற்சி துணை போலீஸ் சூப்பிரண்டுகள்
இந்த நிலையில் பயிற்சியில் ஈடுபட்ட துணை போலீஸ் சூப்பிரண்டுகள் சிலருக்கு காய்ச்சல் அறிகுறி தென்பட்டது. இதைத்தொடர்ந்து அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 5 பயிற்சி துணை போலீஸ் சூப்பிரண்டுகளுக்கு கொரோனா பாதிப்பு இருந்தது கண்டறியப்பட்டது. இதனால் அவர்கள் 5 பேரையும் புஞ்சைபுளியம்பட்டி வட்டார ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ குழுவினர், பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். இதையடுத்து அரசு அலுவலர் பயிற்சி நிலையத்தில் பணிபுரியும் 40-க்கும் மேற்பட்ட பணியாளர்களுக்கு நேற்று கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
Related Tags :
Next Story