ஈரோடு மாவட்டத்தில் 2-வது நாளாக இரவு நேர ஊரடங்கை மீறிய 75 பேர் மீது வழக்குப்பதிவு


ஈரோடு மாவட்டத்தில் 2-வது நாளாக இரவு நேர ஊரடங்கை மீறிய 75 பேர் மீது வழக்குப்பதிவு
x
தினத்தந்தி 23 April 2021 2:43 AM IST (Updated: 23 April 2021 2:43 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு மாவட்டத்தில் 2-வது நாளாக இரவு நேர ஊரடங்கை மீறிய 75 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் 2-வது நாளாக இரவு நேர ஊரடங்கை மீறிய 75 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
இரவு நேர ஊரடங்கு
தமிழகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரையும், ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் அமலில் உள்ளது.
மருத்துவம் மற்றும் அவசர தேவைக்கு வழக்கம்போல் வாகனங்கள் இயக்கத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் இரவு நேர ஊரடங்கை மீறி வெளியில் சுற்றித்திரிபவர்கள் மற்றும் இரவு நேரங்களில் கடைகளை திறந்து வைத்து வியாபாரம் செய்பவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
75 பேர் மீது வழக்குப்பதிவு
அதன்படி கடந்த 20-ந் தேதி ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து சோதனை சாவடிகளிலும் போலீசார் தீவிரமாக கண்காணித்தனர். மேலும் மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது தேவை இல்லாமல் வெளியே சுற்றியவர்கள் மற்றும் 10 மணிக்கு மேல் கடையை திறந்து வைத்து வியாபாரம் செய்தவர்கள் என மொத்தம் 50 பேர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் நடந்த தீவிர சோதனையில் வெளியே சுற்றியவர்கள் மற்றும் இரவு 10 மணிக்கு மேல் கடையை திறந்து வைத்தவர்கள் என 75 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களில் மட்டும் மாவட்டம் முழுவதும் ஊரடங்கை மீறியதாக 125 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story