திருச்சி அரசு மருத்துவமனை வளாகத்தில் பயிற்சி செவிலியர் விடுதி கொரோனா சிகிச்சை மையமாக மாற்றம்
திருச்சி அரசு மருத்துவமனை வளாகத்தில் பயிற்சி செவிலியர் விடுதி கொரோனா சிகிச்சை மையமாக மாற்றம் செய்யப்பட்டது.
திருச்சி,
திருச்சி அரசு மருத்துவமனை வளாகத்தில் பயிற்சி செவிலியர் விடுதி கொரோனா சிகிச்சை மையமாக மாற்றம் செய்யப்பட்டது.
திருச்சி அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்காக பழைய கட்டிடத்தில் பிரத்யேக வார்டுகள் அமைக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதவிர, அரசு மற்றும் தனியார் கல்லூரிகளிலும் கொரோனா சிகிச்சைக்கான தனிமை முகாம்கள் அமைக்கப்பட்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. திருச்சி மாவட்டத்தில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் திருச்சி அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள பயிற்சி செவிலியர் விடுதி கொரோனா 2-ம் நிலை சிகிச்சை மையமாக மாற்றப்பட்டுள்ளது. இதற்காக செவிலியர் விடுதியை சுற்றி இரும்பு தகரத்தால் ஆன தடுப்புகள் அமைத்து மறைக்கப்பட்டுள்ளது. அங்கு 150-க்கும் படுக்கை வசதிகளுடன் சிகிச்சை மையம் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. ஆனால் இன்னமும் அங்கு நோயாளிகள் அனுமதிக்கப்படவில்லை. கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்போது, தயார்நிலையில் உள்ள அந்த சிகிச்சை மையத்தை பயன்படுத்த உள்ளதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
Related Tags :
Next Story