லால்குடி அருகே பெண் அடித்துக்கொலை


லால்குடி அருகே பெண் அடித்துக்கொலை
x
தினத்தந்தி 23 April 2021 2:53 AM IST (Updated: 23 April 2021 2:53 AM IST)
t-max-icont-min-icon

லால்குடி அருகே பெண் அடித்துக்கொலை செய்யப்பட்டார். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கல்லக்குடி, 
லால்குடி அருகே பெண் அடித்துக்கொலை செய்யப்பட்டார். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பெண் அடித்துக்கொலை

லால்குடி அடுத்த எல்.அபிஷேகபுரம் கிராமத்தில் லால்குடியை சேர்ந்தவர் விவசாயி இளங்கோவன். இவருடைய வயலில் 35 வயதுடைய பெண் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக லால்குடி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே லால்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு ராதாகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.

விசாரணையில் அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்று தெரியவில்லை. அந்த பெண்ணின் தலையில் மரக்கட்டையால் அடித்த ரத்த காயம் இருந்தது. அருகில் மரக்கட்டையும் ரத்தகறையுடன் கிடந்தது. ஆனால் அவர் எதற்காக அடித்து கொலை செய்யப்பட்டார்? கொலையாளிகள் யார்? என்று தெரியவில்லை. 

போலீசார் விசாரணை

இதைத்தொடர்ந்து திருச்சியில் இருந்து மோப்பநாய் மார்க் வரவழைக்கப்பட்டு துப்புதுலக்கப்பட்டது. பின்னர் அந்த பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசேதனைக்காக லால்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் லால்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்குப்பதிவு செய்து, அந்த பெண் கள்ளக்காதல் விவகாரத்தில் கொலை செய்யப்பட்டாரா?அல்லது நகைக்காக கொலை செய்யப்பட்டாரா? என்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story