சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் என்ற பெயரில் பாமாயில் நிரப்பிய 5 ஆயிரம் லிட்டர் பாக்கெட்டுகள் பறிமுதல் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடவடிக்கை
சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் என்ற பெயரில் பாமாயில் நிரப்பிய 5 ஆயிரம் லிட்டர் பாக்கெட்டுகளை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
திருச்சி,
திருச்சி சங்கிலியாண்டபுரத்தில் உள்ள ஒரு சமையல் எண்ணெய் தயாரிக்கும் நிறுவனத்தில் கலப்பட எண்ணெய் பாக்கெட்டுகளில் நிரப்பி விற்கப்படுவதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே திருச்சி மாவட்ட நியமன அதிகாரி டாக்டர் ரமேஷ்பாபு தலைமையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் வசந்த், முத்துராஜா, ஸ்டாலின் ராஜ், மாரியப்பன் ஆகியோர் நேற்று திடீர் சோதனை நடத்தினர். இந்த சோதனையின்போது அந்த நிறுவனத்தில் பிரபல நிறுவனத்தின் பெயரில் பாக்கெட்களில் பாமாயிலை நிரப்பி சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் என்று கூறி போலியாக அவற்றை கடைகளில் விற்பனை செய்வதற்காக வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அங்கு வைக்கப்பட்டிருந்த 5 ஆயிரம் லிட்டர் எண்ணெய் பாக்கெட்டுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story