புள்ளம்பாடி ஒன்றியத்தில் நல்ஏர் பூட்டிய விவசாயிகள்
புள்ளம்பாடி ஒன்றியத்தில் நல்ஏர் பூட்டி விவசாயிகள் உழுதனர்.
கல்லக்குடி,
புள்ளம்பாடி ஒன்றியத்தில் நல்ஏர் பூட்டி விவசாயிகள் உழுதனர்.
புள்ளம்பாடி ஒன்றியம் மேலரசூர், மால்வாய், புள்ளம்பாடி, கருடமங்கலம், ஊட்டத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் நல்ஏர் உழவு செய்யும் நாள் கடைப்பிடிக்கப்பட்டது. இதையொட்டி நேற்று காலை 10 மணி அளவில் கிராம விவசாயிகள் கிராமத்தின் பொது நிலத்தில் விவசாயம் செய்து நல்ல மகசூல் அறுவடை முடிவு பெற்று நிலமகளுக்கு நன்றி கூறி, வரும் நாளில் வருணபகவான் போதிய அளவு பெய்யவும் விவசாயிகள் நிலத்தில் நல் ஏர் உழவு செய்து வந்தனம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் கிராம இளைஞர்கள், பெண்கள், முக்கியஸ்தர்கள் திரளாக கலந்து கொண்டு நிலத்தை உழவு செய்து வழிபட்டனர். தொடர்ந்து அவரவர்களின் நிலங்களுக்கும் சென்று உழவு செய்தனர்.
Related Tags :
Next Story