கொரோனா தடுப்பு ஆலோசனை கூட்டம்


கொரோனா தடுப்பு ஆலோசனை கூட்டம்
x
தினத்தந்தி 23 April 2021 3:54 AM IST (Updated: 23 April 2021 3:54 AM IST)
t-max-icont-min-icon

வாசுதேவநல்லூரி கொரோனா தடுப்பு ஆலோசனை கூட்டம் நடந்தது.

வாசுதேவநல்லூர்:
வாசுதேவநல்லூர் நகர பஞ்சாயத்து பகுதிகளில் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் விதமாக அனைத்து வியாபாரிகள் சங்க தலைவர்கள், நிர்வாகிகள், அனைத்து சமுதாய தலைவர்கள், வேன், கார், ஆட்டோ சங்க நிர்வாகிகள் ஆகியோர் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடந்தது. வாசுதேவநல்லூர் சமுதாய நலக்கூடத்தில் நடந்த கூட்டத்திற்கு சிவகிரி தாசில்தார் ஆனந்த் தலைமை தாங்கினார். வாசுதேவநல்லூர் வட்டார சுகாதார அலுவலர் டாக்டர் சாந்தி சரவணபாய், நகர பஞ்சாயத்து நிர்வாக அலுவலர் சுதா, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன், வாசுதேவநல்லூர் வருவாய் ஆய்வாளர் சிவன்பாண்டி, சுகாதார மேற்பார்வையாளர் சரபோசி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story