சேலத்தில் அதிக பயணிகளை ஏற்றி வந்த தனியார் பஸ் கண்டக்டருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம்
சேலத்தில் அதிக பயணிகளை ஏற்றி வந்த தனியார் பஸ் கண்டக்டருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம்.
சேலம்,
சேலத்தில் கொரோனா பரவலை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அரசு மற்றும் தனியார் பஸ்களில் பயணிகள் அனைவரும் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும். பயணிகள் நின்று கொண்டு பயணம் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் தடையை மீறி சில பஸ்களில் அதிகமான பயணிகளை ஏற்றி செல்வதாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு புகார்கள் சென்றன. இதைத்தொடர்ந்து அம்மாபேட்டை மண்டல உதவி ஆணையர் சண்முகவடிவேல் தலைமையில் மாநகராட்சி அதிகாரிகள் சித்தேஸ்வரன், மாணிக்கவாசகம் மற்றும் குழுவினர் நேற்று அம்மாபேட்டை பகுதியில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக வந்த 4 தனியார் பஸ்களை நிறுத்தி பயணிகள் முககவசம் அணிந்து உள்ளார்களா? பஸ்சில் சமூக இடைவெளி பின்பற்றப்படுகிறதா?, டிரைவர் மற்றும் கண்டக்டர் முககவசம் அணிந்துள்ளனரா? என்பது குறித்து கண்காணித்தனர். ஆனால் ஒரு தனியார் பஸ்சில் கூட்டம் அதிகமாக இருப்பதும், அதில் பயணிகள் நின்று கொண்டு பயணம் செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து கொரோனா விதிகளை மீறியதாக அந்த தனியார் பஸ் கண்டக்டருக்கு ரூ.5 ஆயிரமும், பஸ்சில் முககவசம் அணியாமல் இருந்த பயணிகளுக்கு ரூ.200-ம் அபராதம் விதித்து மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
Related Tags :
Next Story