பீடி தொழிலாளர்கள் ஆலோசனை கூட்டம்


பீடி தொழிலாளர்கள் ஆலோசனை கூட்டம்
x
தினத்தந்தி 23 April 2021 3:57 AM IST (Updated: 23 April 2021 3:57 AM IST)
t-max-icont-min-icon

கடையம் அருகே உள்ள வள்ளியம்மாள்புரத்தில் பீடி தொழிலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது.

கடையம்:
கடையம் அருகே உள்ள வள்ளியம்மாள்புரத்தில் பீடி சங்க கிளை அமைப்பு கூட்டம் நடைபெற்றது. அருணாசலவடிவு தலைமை தாங்கினார். பீடி சங்க மாவட்ட பொதுச்செயலாளர் வேல்முருகன், துணை பொதுச்செயலாளர் மகாவிஷ்ணு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கடையம் ஒன்றிய செயலாளர் ராமகிருஷ்ணன், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் வெங்கடேஷ், பீடி சங்க நிர்வாகிகள் ஆறுமுகராஜ், ராமகிருஷ்ணன் ஆகியோர் பேசினார்கள். இதில் புதிய தலைவராக தமிழரசி, துணைத்தலைவராக காசியம்மாள், செயலாளராக அன்னலட்சுமி, துணை  செயலாளராக ஜெயலட்சுமி, பொருளாளராக அருணாசலவடிவு ஆகியோர் தேர்ந்து எடுக்கப்பட்டனர். இக்கூட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட பீடி தொழிலாளர்கள் பங்கேற்றனர்.

கூட்டத்தில், 40 ஆண்டுகளாக வள்ளியம்மாள்புரத்தில் செயல்பட்ட பீடி கம்பெனி கிளையை வடமலைபட்டிக்கு மாற்றுவதற்கு கண்டனத்தை தெரிவிப்பதோடு, மீண்டும் வள்ளியம்மாள்புரத்தில் கடையை திறந்து வேலை வழங்கிட பீடி கம்பெனி நிர்வாகம் மற்றும் தொழிலாளர் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 2021 ஏப்ரல் மாதம் முதல் பீடித்தொழிலாளர்களுக்கு தமிழக அரசின் பஞ்சபடி உயர்வு அரசாணைபடி 1,000 பீடிக்கு ரூ.9.39 ஆக மொத்தம் ரூ.227.24 பைசா உடனடியாக வழங்கிட தொழிலாளர் துறை நடவடிக்கை எடுத்திட வேண்டும். 1,000 பீடி சுற்றுவதற்கு தரமான இலை 700 கிராம் வழங்கிட வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Next Story