சேலம் அருகே பட்டாசு வெடித்த போது உடல் கருகிய சிறுவன் சாவு


சேலம் அருகே பட்டாசு வெடித்த போது உடல் கருகிய சிறுவன் சாவு
x
தினத்தந்தி 23 April 2021 3:57 AM IST (Updated: 23 April 2021 3:58 AM IST)
t-max-icont-min-icon

சேலம் அருகே பட்டாசு வெடித்த போது உடல் கருகிய சிறுவன் சாவு.

சூரமங்கலம்,

சேலம் அருகே உள்ள திருமலைகிரி மொட்டையன் தெரு பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 30). எலக்ட்ரீசியன். இவரது மனைவி சுதா (25). இவர்களது  மகன் சஞ்சித் (5). அந்த பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது. இதற்காக வெடிப்பதற்காக பட்டாசுகளை வாங்கி வைத்துள்ளனர்.
அதில் ஒரு பட்டாசை சம்பவத்தன்று இரவு சிறுவன் சஞ்சித் எடுத்து வெடித்துள்ளான், அப்போது ஏற்பட்ட தீ மற்ற பட்டாசுகளின் மீது பட்டு வெடித்து சிதிறின. இதில் சஞ்சித் அணிந்திருந்த ஆடைகள் தீப்பிடித்தது. இதனால் உடல் கருகி சஞ்சித் படுகாயம் அடைந்தான். உடனடியாக அக்கம்பக்கத்தினர் அவனை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிறுவன் சஞ்சித் பரிதாபமாக உயிரிழந்தான். இது குறித்து இரும்பாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story