ஓமலூர் பெண் போலீஸ் திடீர் சாவு


ஓமலூர் பெண் போலீஸ் திடீர் சாவு
x
தினத்தந்தி 23 April 2021 4:03 AM IST (Updated: 23 April 2021 4:03 AM IST)
t-max-icont-min-icon

ஓமலூர் பெண் போலீஸ் திடீர் சாவு

ஓமலூர்:
மேச்சேரி கரட்டுப்பட்டி பகுதியை சேர்ந்தவர் சக்திவேல். இவருடைய மனைவி மாலதி (வயது 33). இவர் கடந்த 2018-ம் ஆண்டு முதல் ஓமலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் முதல்நிலை காவலராக பணிபுரிந்து வந்தார். சக்திவேல், மாலதி தம்பதிக்கு குழந்தை இல்லை. இதற்காக மாலதி சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. மேலும் அவரது வயிற்றில் கட்டி இருந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் 12-ந் தேதி முதல் விடுப்பில் சென்ற மாலதி, சேலம் திருவாக்கவுண்டனூர் பைபாஸ் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்துள்ளார். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக அரியானூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் மாலதி திடீரென்று உயிரிழந்தார்.  இந்த சம்பவம் போலீசார் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் அவரது மரணம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story