கொடுங்கையூர் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு கொரோனா உறுதி
கொடுங்கையூர் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். இவருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
பெரம்பூர்,
சென்னையை அடுத்த ஆலந்தூர், எம்.கே.என். சாலையில் உள்ள போலீஸ் குடியிருப்பில் வசித்து வருபவர் இளங்கோ (வயது 53). இவர், கொடுங்கையூர் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். இவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதற்காக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இன்ஸ்பெக்டர் இளங்கோ, ஏற்கனவே 2 முறை கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பிறகு மீண்டு வந்தார். தற்போது கொரோனா தடுப்பூசி 2 தவணை செலுத்திய பிறகும் 3-வதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
Related Tags :
Next Story