ஐதராபாத் செல்ல வந்த பயணிக்கு கொரோனா விமானம் ஒரு மணிநேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது
விமானத்தில் பயணம் செய்ய வந்த ஐதராபாத்தை சேர்ந்தவருக்கு சளி தொல்லை இருந்தது.
ஆலந்தூர்,
சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து ஐதராபாத்துக்கு விமானம் செல்ல இருந்தது. அதில் பயணம் செய்ய 85 பேர் சோதனைகளை முடித்துக்கொண்டு விமானத்தில் ஏறி அமர்ந்தனர். அப்போது விமானத்தில் பயணம் செய்ய வந்த ஐதராபாத்தை சேர்ந்த ராமகிருஷ்ணன் (வயது 50) என்பவருக்கு சளி தொல்லை இருந்தது.
அவரது கொரோனா பரிசோதனை முடிவு அவரது செல்போனுக்கு வந்தது. அதில் அவருக்கு கொரோனா இருப்பது உறுதியானது. அந்த முடிவை பார்த்த விமான பணிப்பெண்கள், விமானிக்கு தகவல் தந்தனர். அவர், இதுபற்றி விமான நிலைய சுகாதாரத்துறைக்கு தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து கொரோனா பாதித்த பயணி, விமானத்தில் இருந்து கீழே இறக்கப்பட்டார். பின்னர் மற்ற பயணிகளும் கீழே இறக்கப்பட்டனர். விமானம் முழுவதும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டது. இதனால் சுமார் ஒரு மணிநேர தாமதத்துக்கு பிறகு அந்த விமானம் ஐதராபாத்துக்கு புறப்பட்டு சென்றது. கொரோனா பாதித்த பயணியை சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் அழைத்துச்சென்றனர்.
Related Tags :
Next Story