ஊரடங்கில் வருமானம் இல்லாததால் துணி வியாபாரி குளத்தில் குதித்து தற்கொலை
ஊரடங்கில் வருமானம் இல்லாததால் துணி வியாபாரி குளத்தில் குதித்து தற்கொலை கடிதத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை.
சென்னை,
சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள கோதண்ட ராமன் கோவிலுக்கு சொந்தமான குளத்தில் ஆண் ஒருவரில் உடல் மிதப்பதாக போலீசாருக்கு நேற்று முன்தினம் தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் விரைந்து வந்த குமரன் நகர் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் நடத்திய விசாரணையில், இறந்த நபர் ஜாபர்கான் பேட்டையை சேர்ந்த முருகன் (வயது 37) என்பதும், தள்ளுவண்டியில் துணி வியாபாரம் செய்து வந்ததும், அவர் குளத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது.
மேலும், முருகன் தற்கொலை செய்து கொள்ளும் முன்பு கடிதம் ஒன்றை எழுதி வைத்துள்ளார். அதில். ‘கொரோனா ஊரடங்கின் காரணமாக கடந்த ஆண்டில் இருந்து வருமானம் இன்றி தவிப்பதாகவும், அதனால் தான் தற்கொலை செய்து கொள்வதாகவும், தனது சாவுக்கு யாரும் காரணமில்லை என்றும்’ எழுதப்பட்டிருந்தது. இதையடுத்து கடிதத்தை கைப்பற்றிய போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story