கும்மிடிப்பூண்டி அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் திருட்டு
கும்மிடிப்பூண்டி அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் திருடப்பட்டது.
கும்மிடிப்பூண்டி,
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த புதுகும்மிடிப்பூண்டி சீத்தாம்மாள் தெருவை சேர்ந்தவர் வேதரத்தினம் (வயது 32). தொழிற்சாலை ஊழியர். நேற்று காலை வழக்கம் போல் வேதரத்தினம் வேலைக்கு சென்று விட்டார்.
அவரது மனைவி மோகனா (26) வீட்டை பூட்டி விட்டு ஆஸ்பத்திரிக்கு சென்று விட்டு மாலை 5 மணிக்கு வீட்டுக்கு வந்தார்.
அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பது கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார்.
வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் பீரோவில் இருந்த 4 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.3 ஆயிரத்து 500 போன்றவற்றை திருடி சென்றிருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் குமணன் தலைமையில் கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story