திருவள்ளூர் மாவட்ட சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையத்தில் கண்காணிப்பு கேமரா பழுதால் பரபரப்பு


திருவள்ளூர் மாவட்ட சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையத்தில் கண்காணிப்பு கேமரா பழுதால் பரபரப்பு
x
தினத்தந்தி 23 April 2021 4:33 PM IST (Updated: 23 April 2021 4:33 PM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர் மாவட்ட சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையத்தில் கண்காணிப்பு கேமரா பழுதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவள்ளுர்,

திருவள்ளூர் மாவட்டத்தில் பதிவான 10 சட்டமன்ற தொகுதிக்கான வாக்குப்பதிவு எந்திரமானது திருவள்ளுரை அடுத்த பெருமாள்பட்டு தனியார் கல்லூரி மற்றும் பள்ளி வளாகத்தில் சீல் வைக்கப்பட்டு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.அதில் அம்பத்தூர், மாதவரம், திருவொற்றியூர், மதுரவாயல், சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குப்பதிவு எந்திரம் ஸ்ரீராம் தொழில்நுட்ப கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது,

நேற்று அதிகாலை 3 மணியளவில் வாக்கு எண்ணும் மையத்தில் கண்காணிப்பு கேமரா திடீரென்று பழுதானதால் தி.மு.க.வினர் அதிர்ச்சி அடைந்தனர்.

அதைத்தொடர்ந்து அவர்கள் கண்காணிப்பு கேமரா கட்டுப்பாட்டு அறைக்கு நேரடியாக சென்று புகார் அளித்தனர்.

அதன் பேரில் கண்காணிப்பு கேமரா பழுது ஒரு மணி நேரத்துக்கு பிறகு சரி செய்யப்பட்டது.

Next Story