திருத்தணியில் ரூ.2 கோடி அரசு நிலம் மீட்பு - வருவாய்த்துறையினர் நடவடிக்கை
திருத்தணியில் ரூ.2 கோடி அரசு நிலத்தை மீட்டு வருவாய்த்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டனர்.
பள்ளிப்பட்டு,
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சித்தூர் சாலையில் பெட்ரோல் நிலையம் அருகே பச்சரிசி மலை புறம்போக்கில் அரசுக்கு சொந்தமான ரூ.2 கோடி மதிப்புள்ள நிலம் உள்ளது. இந்த நிலத்தை சிலர் ஆக்கிரமித்து கட்டிடம் கட்டும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து திருத்தணி ஆர்.டி.ஓ. சத்யாவுக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. அவரது உத்தரவின் பேரில் திருத்தணி தாசில்தார் ஜெயராணி, வருவாய் ஆய்வாளர் குமார் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் உள்பட வருவாய்த்துறையினர் நேற்று அதிரடியாக அந்த இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர்.
அப்போது சிலர் அந்த இடத்தில் கட்டிடங்கள் கட்டும் முயற்சியில் ஈடுபட்டிருந்தனர். அவர்களை வருவாய் துறையினர் தடுத்து அந்த இடம் அரசுக்கு சொந்தமான இடம் என்றும், அதில் அத்துமீறி கட்டிடங்களை எழுப்ப கூடாது என்றும் எச்சரித்தனர்.
உடனடியாக அந்த இடத்தை விட்டு அவர்களை காலி செய்யுமாறு தெரிவித்தனர். இதையடுத்து அந்த இடத்தில் கட்டிடம் கட்டும் பணி உடனடியாக நிறுத்தப்பட்டது. அங்கு இருந்தவர்கள் அந்த இடத்தை விட்டு வெளியேறினார்கள்.
Related Tags :
Next Story