கம்பத்தில் வாய்க்காலில் குடும்பத்துடன் மீன் பிடிக்கும் தொழிலாளர்கள் அயிரை மீன் கிலோ ரூ.1,200-க்கு விற்பனை
கம்பத்தில் வேலை இல்லாத தொழிலாளர்கள் குடும்பத்துடன் மீன் பிடிக்கின்றனர். இதில் அயிரை மீன் கிலோ ரூ.1,200-க்கு விற்பனை செய்யப்பட்டது.
கம்பம்:
கம்பத்தில் உள்ள உத்தமுத்து வாய்க்கால், பாளையம் பரவு வாய்க்கால், சின்னவாய்க்கால்களில் தற்போது தண்ணீர் வரத்து இல்லை. இதனால் வாய்க்கால் பள்ளங்களில் தேங்கியுள்ள தண்ணீரில் அயிரை, கெண்டை, குரவை, தேளி போன்ற மீன் வகைகள் நிறைய உள்ளன. இந்தநிலையில் வேலை இல்லாத ஆண், பெண் தொழிலாளர்கள் குடும்பத்துடன் வாய்க்கால்களில் மீன் பிடிக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். இவ்வாறு பிடிக்கும் அயிரை மீன் கிலோ ரூ.1,200-க்கும், கெண்டை, குரவை மீன் கிலோ ரூ.300-க்கும், தேளி மீன் ரூ.100-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இது குறித்து மீன்பிடிப்பவர்கள் கூறுகையில், தற்போது மண் தட்டுப்பாட்டால் செங்கல் சூளைகளில் வேலை இல்லை. இதனால் வாய்க்கால்களுக்கு குடும்பத்துடன் சென்று மீன்களை பிடித்து விற்பனை செய்து வருகிறோம். இது எங்களது குடும்ப செலவுக்கு போதுமானதாக உள்ளது என்றனர்.
Related Tags :
Next Story