செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா நோயாளிகளுக்கு 480 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது - டீன் தகவல்
செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா நோயாளிகளுக்கு 480 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது என்று டீன் முத்துகுமரன் தெரிவித்தார். செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரி டீன் முத்துகுமரன் நிருபர்களிடம் பேசும்போது கூறியதாவது:-
செங்கல்பட்டு,
செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா நோயாளிகளுக்கு தற்போது 480 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. அதில் 240 நோயாளிகள் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஒரு வேளை நோயாளிகள் அதிக அளவில் சிகிச்சை பெற செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தால் மேலும் கூடுதலாக 100 படுக்கைகள் ஏற்படுத்தப்படும். கொரோனா தடுப்பூசிகள், ஆக்சிஜன் என அனைத்தும் தயார் நிலையில் போதுமான அளவில் உள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகி்றது நோயாளிகளும், அதிகமான அளவில் ஆஸ்பத்திரிக்கு வருகை தருகின்றனர்.
டாக்டர்கள் மற்றும் நர்சுகள் பற்றாக்குறை உள்ளது. ஆஸ்பத்திரியில் டாக்டர்கள், நர்சுகளுக்கான ் காலிபணியிடங்களை நிரப்ப அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
Related Tags :
Next Story