கோவில்பட்டியில் கொரோனாவுக்கு முதியவர் பலி
கோவில்பட்டியில் கொரோனாவுக்கு முதியவர் பலியானார்.
கோவில்பட்டி:
தமிழகத்தில் கொரோனா 2-வது அலை வேகம் எடுத்துள்ளது. கோவில்பட்டி மாவட்ட அரசு மருத்துவமனை மற்றும் தனியார் கல்லூரி சிகிச்சை மையத்தில் நேற்று முன்தினம் 143 பேர் சிகிச்சை பெற்று வந்தனர். நேற்று 17 பேர் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். நேற்று காலையில் அரசு மருத்துவமனையில் கொரோனா நோய் தொற்று சிகிச்சை பெற்று வந்த கோவில்பட்டி புதுகிராமம் சிந்தாமணி நகரைச் சேர்ந்த 62 வயது முதியவர் சிகிச்சை பலனளிக்காமல் மரணம் அடைந்தார். தகவல் அறிந்ததும் மருத்துவத் துறையினர், நகரசபை நிர்வாகத்தினர் விரைந்து சென்று பலியான முதியவர் உடலை பாதுகாப்பாக அடக்கம் செய்வதற்காக எடுத்துச் சென்றனர்.
Related Tags :
Next Story