திண்டுக்கல்லில் கஞ்சா வியாபாரி உள்பட 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது
திண்டுக்கல்லில் கஞ்சா வியாபாரி உள்பட 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
திண்டுக்கல்:
ஒட்டன்சத்திரம் தாலுகா சந்தமநாயக்கன்பட்டி காந்திநகரை சேர்ந்தவர் சவுந்திரபாண்டியன் (வயது 45). கஞ்சா வியாபாரியான இவர், கடந்த பிப்ரவரி மாதம் 16-ந் தேதி வேடசந்தூர் பகுதியில் மோட்டார் சைக்கிளில் 11 கிலோ கஞ்சாவை மறைத்து வைத்து கொண்டு சென்ற போது வேடசந்தூர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். பின்னர் இவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில் இவர் மீது கஞ்சா விற்பனை செய்தது தொடர்பாக பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதால் சவுந்திரபாண்டியனை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய அனுமதிக்கும்படி மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமிக்கு போலீஸ் சூப்பிரண்டு ரவளி பிரியா பரிந்துரை செய்தார். அதன் பேரில் சவுந்திரபாண்டியனை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டார். இதையடுத்து அவர், மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இதேபோல் சத்திரப்பட்டி கோபாலபுரத்தை சேர்ந்த வில்சன்குட்டி பாபு (46) என்பவர் அனுமதியின்றி துப்பாக்கி வைத்திருந்ததற்காக சத்திரப்பட்டி போலீசாரால் கடந்த 12-ந்தேதி கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் இவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய அனுமதிக்கும்படி கலெக்டருக்கு, போலீஸ் சூப்பிரண்டு பரிந்துரை செய்தார். அதன் பேரில் வில்சன்குட்டி பாபுவை கைது செய்ய கலெக்டரும் உத்தரவிட்டதையடுத்து அவரை மதுரை மத்திய சிறையில் போலீசார் அடைத்தனர்.
Related Tags :
Next Story