நடுவழியில் பழுதாகி நின்ற அரசு பஸ்


நடுவழியில் பழுதாகி நின்ற அரசு பஸ்
x
தினத்தந்தி 23 April 2021 8:43 PM IST (Updated: 23 April 2021 8:47 PM IST)
t-max-icont-min-icon

உப்பட்டி பஜாரில் நடுவழியில் அரசு பஸ் பழுதாகி நின்றது.

பந்தலூர்,

கூடலூரில் இருந்து நேற்று மாலை 3.30 மணிக்கு உப்பட்டி வழியாக பாட்டவயலுக்கு அரசு பஸ் சென்றது. உப்பட்டி பஜாரில் வந்தபோது திடீரென பழுதாகி நடுவழியில் அரசு பஸ் நின்றது. 

இதனால் பயணிகள் அவதி அடைந்தனர். பின்னர் அவர்கள் தனியார் வாகனங்களில் தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு சென்றனர். இதையடுத்து நீண்ட நேரத்துக்கு பிறகு பழுது நீக்கப்பட்டு, அரசு பஸ் புறப்பட்டு சென்றது.

Next Story