கோரோனா பாதிப்பு


கோரோனா பாதிப்பு
x
தினத்தந்தி 23 April 2021 8:54 PM IST (Updated: 23 April 2021 8:54 PM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 295 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தற்போது பாதிப்பு எண்ணிக்கை 24 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.303 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

திருப்பூர்
திருப்பூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 295 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தற்போது பாதிப்பு எண்ணிக்கை 24 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.303 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.
295 பேருக்கு கொரோனா
திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று கோரதாண்டவம் ஆடி வருகிறது. அந்த அளவிற்கு பாதிப்பு இருந்து வருகிறது. நாளுக்கு நாள் மாவட்டத்தில் பாதிப்பு உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். அதன்படி நேற்று ஒரே நாளில் மாவட்டத்தில் 295 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இவர்கள் அனைவரும் திருப்பூர் மற்றும் கோவையில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுபோல் நேற்று ஒரே நாளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற 303 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.
24 ஆயிரத்தை நெருங்குகிறது
தற்போது மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 23 ஆயிரத்து 478ஆக உயர்ந்துள்ளது. மேலும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 21 ஆயிரத்து 74ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட 2 ஆயிரத்து 170 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுபோல் சிகிச்சை பலனின்றி இதுவரை 234 பேர் பலியாகியுள்ளனர்.
பாதிப்பு 24 ஆயிரத்தை நெருங்கியுள்ளதால் பொதுமக்கள் அரசு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். அரசுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அரசு வழிமுறைகளை கடைபிடிக்காதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கையும் விடுத்துள்ளனர்.
---------

-

Next Story