தூத்துக்குடியில் இன்று காய்ச்சல் முகாம் நடைபெறும் இடங்கள் கலெக்டர் செந்தில்ராஜ் தகவல்
தூத்துக்குடியில் இன்று காய்ச்சல் முகாம் நடைபெறும் இடங்களை கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்து உள்ளார்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று (சனிக்கிழமை) காய்ச்சல் முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
இது குறித்து மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
சிறப்பு முகாம்
தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக காய்ச்சல் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி இன்று (சனிக்கிழமை) காய்ச்சல் முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் காலை 9 மணிமுதல் 11 மணி வரை 58வது வார்டு சாமிநகர் (அங்கன்வாடி மையம்), 5-வது வார்டு எட்டயபுரம் ஹவுசிங் போர்டு (பிள்ளையார்கோவில் அருகில்), 3-வது வார்டு மில்லர்புரம் (ரேசன் கடை அருகில்), காலை 11 மணிமுதல் 1 மணி வரை 59-வது வார்டு ராஜீவ் நகர் மெயின், 4-வது வார்டு ஸ்டேட் பாங்க் காலனி, 34-வது வார்டு தபால் தந்தி காலனி 9-வது தெரு, 50-வது வார்டு செல்சீனி காலனி (காந்தாரியம்மன் கோவில் அருகில்), 27-வது வார்டு மீனா கானா தெரு (அங்கன்வாடி மையம்), பகல் 2 மணி முதல் 4 மணி வரை 58-வது வார்டு நேசமணி நகர் மெயின், 6-வது வார்டு எழில்நகர் (பெத்தானியா பள்ளி), 34-வது வார்டு கதிர் வேல் நகர் சர்ச், 15-வது வார்டு நம்மாழ்வா£ர் தெரு (சபா அருகில்), 4-வது வார்டு குறிஞ்சி நகர் 6-வது தெரு ஆகியபகுதிகளில் காய்ச்சல் சிறப்பு முகாம் நடக்கிறது.
கோவில்பட்டி
கோவில்பட்டி நகராட்சியில் காலை 9 மணிமுதல் 11 மணி வரை சிந்தாமணிநகர் பகுதியிலும், காலை 11 மணிமுதல் 1 மணி வரை வசந்தன்நகர் பகுதியிலும், பகல் 2 மணி முதல் 4 மணி வரை செக்கடிதெரு பகுதியிலும், காயல்பட்டிணம் நகராட்சியில் காலை 9 மணிமுதல் 11 மணி வரை சீதக்காதிநகர் பகுதியிலும், காலை 11 மணிமுதல் 1 மணி வரை ஓடக்கரை பகுதியிலும், பகல் 2 மணி முதல் 4 மணி வரை ஏ.எல்.எப். தெரு பகுதியிலும் காய்ச்சல் சிறப்பு முகாம் நடக்கிறது.
புதுக்கோட்டை
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஊராட்சி பகுதிகளில் காலை 9 மணிமுதல் 11 மணி வரை
புதுக்கோட்டை மேற்கு தெருரூ, அணியாபரநல்¢லூர், சேதுராமலிங்கபுரம், கீழசெக்காராக்குடி, செட்டியார் தெரு, ஆறுமுகநேரி, ஆசிர்வாதபுரம், புளியமரத் தெரு, தென்திருப்பேரை, கொட்டங்காடு, கல்லாமொழி, சர்ச் தெரு, சாத்தான்குளம் செக்கடி புதுத்தெரு, சாத்தான்குளம், பாண்டவர் மங்கலம், இனாம் மணியாச்சி, முத்துசாமி புரம், சிதம்பரபுரம், தெற்கு சுப்பிரமணியபுரம், வீரகாஞ்சிபுரம், கோட்டநத்தம், ஒட்டநத்தம், இளவேலங்கால், கே.கே.பட்டி,
வெம்பூர், ஆ. துரைச்சாமிபுரம் ஆகிய பகுதிகளிலும், 11 மணிமுதல் 1 மணி வரை ராமசந்திராபுரம், மீனாட்சிப்பட்டி, நாணல்காடு, தெய்வசெயல்புரம் விநாயகர் தெரு, ஆறுமுகநேரி எபனேசர் தெரு, நாசரேத் யாதவர் தெரு, கடையனோடை, சிவலூர், குலசேகரப்பட்டிணம், பொத்தகாலன் விளை, வடக்கு ரத வீதி, சாத்தான்குளம் எஸ்.எஸ்.நகர், கோவில்பட்டி இந்திரா நகர், கோவில்பட்டி ராமலிங்கபுரம், கடம்பூர், பன்னீர்குளம்,
ஊசிமேசியாபுரம், ஜமீன் செங்கல்கடை, சங்கம்பட்டி, அயிரவன்பட்டி, முத்துலாபுரம், மெட்டில்பட்டி, சங்கரப்பநாயக்கன்பட்டி ஆகிய பகுதிகளிலும், பகல் 2 மணிமுதல் 4 மணி வரை திம்மராஜபுரம் மேற்கு தெரு, பேரூரணி, புதுப்பட்டி, மணக்கரை, பாறைக்காடு, பேயன்விளை, திருமறையூர், மணல்காடு தெரு, ஆழ்வார்திருநகரி, தேரியூர், தாண்டவன்காடு, சுப்பிரமணியபுரம், சாயக்காரதெரு, சாத்தான்குளம், பாண்டவர் மங்கலம், பிள்ளையார் நத்தம் காமராஜ்நகர், கழுகுமலை, கொடங்கால் காலனி, கயத்தார் வடக்கு தெரு, தத்தனேரி, பிள்ளையார்நத்தம், கொல்லங்கிணறு. புளியம்பட்டி, குமாரபுரம், பெருமாள்கோவில்பட்டி, சேர்வைக்காரன்பட்டிஆகிய பகுதிகளில் காய்ச்சல் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
ஒத்துழைப்பு
எனவே பொதுமக்கள் அனைவரும் மேற்கண்ட முகாம்களில் தவறாது கலந்து கொண்டு தூத்துக்குடிமாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அவர்் தெரிவித்து உள்ளார்.
Related Tags :
Next Story