பெரியகுளம் அருகே குப்பைமேட்டில் கொட்டப்பட்ட தபால்கள், ஆதார் கார்டுகள்
பெரியகுளம் அருகே குப்பைமேட்டில் தபால்கள், ஆதார் கார்டுகள் கொட்டப்பட்டு கிடந்தன.
பெரியகுளம்:
பெரியகுளம் அருகே தாமரைக்குளம் கண்மாய் பகுதியில் குப்பைமேடு உள்ளது. இந்த குப்பைமேட்டில் பெரியகுளம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு வந்த தபால்கள், ஆதார் அட்டைகள், அரசால் வழங்கப்படும் அரசு பணி விவரம் சம்பந்தமான கடிதங்கள், வங்கி கடிதங்கள், எல்.ஐ.சி. நிறுவனத்தால் அனுப்பப்பட்ட தபால்கள் மற்றும் அரசின் பல்வேறு துறைகளில் இருந்து அனுப்பப்பட்ட தபால்கள் நேற்று கொட்டப்பட்டு கிடந்தன. இதை உரியவர்களுக்கு வழங்காமல் குப்பைமேட்டில் தபால் துறை ஊழியர்கள் போட்டு சென்றுள்ளனர். இந்த தபால்கள் அனைத்தும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் வழங்கப்படாத தபால்கள் ஆகும். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் அது குறித்து தபால் துறை அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனிடையே தபால்களை உரிய நபர்களுக்கு வழங்காமல் குப்பையில் போட்டு சென்றவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story