இறந்து கிடந்த காட்டெருமை


இறந்து கிடந்த காட்டெருமை
x
தினத்தந்தி 23 April 2021 9:14 PM IST (Updated: 23 April 2021 9:14 PM IST)
t-max-icont-min-icon

கொடைக்கானலில் காட்டெருமை ஒன்று மர்மமான முறையில் இறந்து கிடந்தது.

கொடைக்கானல்: 

மலைகளின் இளவரசியான கொடைக்கானல் வனப்பகுதியில் காட்டெருமைகள் அதிகமாக உள்ளன. 

இவை அடிக்கடி நகர் பகுதிகளில் உலா வந்து குப்பைகளில் வீசப்படும் பிளாஸ்டிக் கழிவுகள், பழங்கள் ஆகியவற்றை தின்று விடுகின்றன. 

அதனால் உடல்நலக்குறைபாடு ஏற்பட்டு காட்டெருமைகள் மர்மமான முறையில் இறந்து வருகின்றன. 

இந்த நிலையில் நேற்று கொடைக்கானல் பாக்கியபுரம் என்னுமிடத்தில் உள்ள தனியார் தோட்டத்தில் காட்டெருமை ஒன்று இறந்து கிடந்தது. 

இதுகுறித்து அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

 அதன்பேரில் வனத்துறையினர் விரைந்து சென்று காட்டெருமையின் உடலை கைப்பற்றினர். 

பின்னர் கால்நடை டாக்டர் வரவழைக்கப்பட்டு காட்டெருமையின் உடலை பரிசோதனை செய்து அங்கே புதைத்தனர். 

அந்த காட்டெருமை எப்படி இறந்தது? என்பது குறித்து வனத்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  


Next Story