தேனி மாவட்டத்தில் ஒரே நாளில் 184 பேருக்கு கொரோனா
தேனி மாவட்டத்தில் ஒரே நாளில் 184 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.
தேனி:
தேனி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த சில நாட்களாக பாதிப்பு கிடுகிடுவென உயர்ந்துள்ளது. நேற்று முன்தினம் 160 பேர் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், நேற்று ஒரே நாளில் 184 பேருக்கு இந்த வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது. இதனால், பாதிப்பு எண்ணிக்கை 18 ஆயிரத்து 680 ஆக உயர்ந்தது.
பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் நேற்று 31 பேர் குணமாகினர். இதுவரை இந்த பாதிப்பில் இருந்து மாவட்டத்தில் 17 ஆயிரத்து 476 பேர் மீண்டுள்ளனர். பாதிக்கப்பட்ட 994 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தேனி மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி, மார்ச் மாதங்களில் மொத்தம் 215 பேர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டனர். ஆனால், இந்த மாதத்தில் கடந்த 1-ந்தேதி முதல் நேற்று வரையிலான 23 நாட்களில் மட்டும் 1,435 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டது. இந்தநிலையில் மாவட்டத்தில் தடுப்பூசி போடும் பணியும் மும்முரமாக நடக்கிறது. இதுவரை 43 ஆயிரத்து 612 பேருக்கு முதல் தவணையாக தடுப்பூசி செலுத்தப்பட்டது. அவர்களில் 7 ஆயிரத்து 603 பேர் 2-வது தவணையாக தடுப்பூசி போட்டு கொண்டனர்.
Related Tags :
Next Story