கடலூர் துறைமுகத்துக்கு மீன் வரத்து குறைவால் விலை அதிகரிப்பு
கடலூர் துறைமுகத்துக்கு வரத்து குறைவு காரணமாக மீன்களின் விலை அதிகரித்துள்ளது.
கடலூர் முதுநகர்,
தடை காலம்
கடலூர் துறைமுகத்தில் இருந்து நாள்தோறும் தேவனாம்பட்டினம், சிங்காரத்தோப்பு, அக்கரைக்கோரி, சோனாங்குப்பம், ராசாப்பேட்டை, சித்திரைப்பேட்டை உள்ளிட்ட மீனவ கிராமங்களில் இருந்து ஆயிரத் துக்கும் அதிகமான மீனவர்கள் 100-க்கும் மேற்பட்ட விசை மற்றும் பைபர் படகுகளில் கடலுக்கு சென்று மீன் பிடித்து வருவது வழக்கம்.
இந்நிலையில் கடந்த 15-ந்தேதி முதல் 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் தொடங்கியது. இந்த காலத்தில் என்ஜின் பொருத்தப்பட்ட விசைப் படகுகள் மூலம் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லக் கூடாது.
விலை அதிகரிப்பு
அதேவேளை மோட்டார் பொருத்திய நாட்டு படகுகளும், மோட்டார் பொருத்தாத நாட்டு படகுகளில் (அதாவது பைபர் படகுகள்) மட்டும் மீனவர்கள் கடலுக்கு சென்று மீன் பிடித்து வர தடை ஏதும் இல்லை.
அதன்படி கடலூர் துறைமுகத்தில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பைபர் படகுகளில் மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடித்து வருகின்றனர்.
இது பற்றி மீனவர் ஒருவர் கூறுகையில், கடந்த ஒரு வார காலமாக தினமும் கவளை, மத்தி, கானாங்கத்தை, இறால், வஞ்சரம் போன்ற மீன் வகைகள் நல்ல அளவில் கிடைத்து வந்தன. இதில் மத்தி வகை மீன்கள் பெரும்பாலும் கேரளாவுக்கு லாரிகள் மூலம் வியாபாரிகள் வாங்கி அனுப்பி வைத்தனர்.
ஆனால் நேற்று கடலுக்கு சென்ற பைபர் படகு மீனவர்களுக்கு குறைந்த அளவிலான மீன்களே கிடைத்தன. மத்தி, கவளை, வஞ்சரம், கானாங் கத்தை போன்ற மீன் வகைகள் கடலூர் துறைமுகத்துக்கு வரத்து இருந்தது. இதனால் இந்த வகை மீன்களின் விலை நேற்று சற்று அதிகரித்து காணப்பட்டது. ஒரு கிலோ மத்தி ரூ.80- க்கும், ஒரு கிலோ கவளை ரூ.60- க்கும், ஒரு கிலோ வஞ்சரம் மீன் ரூ.600- க்கும், கானாங்கத்தை ரூ.200- க்கும் விற்பனையானது என்றார்.
இருப்பினும் இந்த மீன்களை பொதுமக்கள், வியாபாரிகள் போட்டி போட்டு வாங்கி சென்றதை காண முடிந்தது.
Related Tags :
Next Story