வாலிபர் நீரில் முழ்கி பலி


வாலிபர் நீரில் முழ்கி பலி
x
தினத்தந்தி 23 April 2021 9:30 PM IST (Updated: 23 April 2021 9:30 PM IST)
t-max-icont-min-icon

தெப்பக்குளத்தில் தண்ணீர் எடுக்க சென்றபோது வாலிபர் நீரில் முழ்கி பலியானார்.

மதுரை,ஏப்.
மதுரை இஸ்மாயில்புரம் பகுதியைச் சேர்ந்தவர் தமிழரசன் (வயது 19). பெற்றோர் இல்லாத நிலையில் அவர் அந்த பகுதியில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று காலை தமிழரசன் தனது உறவினருடன் தண்ணீர் எடுக்க மாரியம்மன் தெப்பக்குளத்திற்கு சென்றுள்ளார். அங்கு வைகை ஆற்றின் கால்வாயில் இருந்து தெப்பக்குளத்தில் தண்ணீர் வந்து சேரும் தொட்டியில் தண்ணீர் எடுத்த போது தவறி உள்ளே விழுந்தார். அப்போது அவருக்கு வலிப்பு வந்ததால் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். இது குறித்து தெப்பக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story