முககவசம் அணியாத 50 பேருக்கு அபராதம்


முககவசம் அணியாத 50 பேருக்கு அபராதம்
x
தினத்தந்தி 23 April 2021 9:38 PM IST (Updated: 23 April 2021 9:38 PM IST)
t-max-icont-min-icon

முககவசம் அணியாத 50 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

முதுகுளத்தூர், 
கொரோனா கட்டுப்பாடு நெறிமுறைகளை மீறுவோரிடம் அபராதம் விதிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. இநத்நிலையில் முதுகுளத்தூர் பகுதிகளில் முக கவசம் மற்றும் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாத வர்களிடம் மண்டல துணை தாசில்தார் சசிகலா, ஊராட்சி ஒன்றிய மேலாளர் சந்திரசேகர் ஆகியோரின் மேற்பார்வையில் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். 
சாலையில் முக கவசம் அணியாமல் வந்த 50-க்கும் மேற்பட்டவர்களை நிறுத்தி அரசின் உத்தரவுப்படி அபராதம் விதித்ததோடு முக கவசம் அணிவதன் அவசியம் குறித்து அறிவுரை வழங்கினர்.  சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முனியசாமி, மேற்பார்வையாளர் நேதாஜி மற்றும் பேரூராட்சி அலுவலர்கள் சோதனையில் ஈடுபட்டனர்.

Next Story