3வது திருமணத்துக்கு முயன்ற டிரைவர்


2 மனைவிகள் விஷம் குடித்ததால் பரபரப்பு
x
2 மனைவிகள் விஷம் குடித்ததால் பரபரப்பு
தினத்தந்தி 23 April 2021 9:43 PM IST (Updated: 23 April 2021 9:43 PM IST)
t-max-icont-min-icon

3வது திருமணத்துக்கு முயன்ற டிரைவர்

மேட்டுப்பாளையம்


கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள வினோபாஜி நகரை சேர்ந்தவர் மனோஜ் (வயது 26) டிரைவர். இவரது மனைவி உமா மகேஸ்வரி (23). இவர்களுக்கு இரண்டு வயதில் மவுனிகா என்ற பெண் குழந்தை உள்ளது. 


இந்த நிலையில் மனோஜ் ஓடந்துறை ராமசாமி நகரைச் சேர்ந்த கணவனை விட்டுப் பிரிந்து வாழும் ஆயிஷா (23)என்ற பெண்ணை இரண்டாவது மனைவியாக திருமணம் செய்து கொண்டதாக தெரிகிறது. 


இதனைத்தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு மனோஜ் 3-வதாக திருச்சியைச்சேர்ந்த ஒரு பெண்ணை அழைத்து வந்து திருமணம் செய்துகொண்டு வெள்ளிப்பாளையத்தில் உள்ள அவரது தாயார் வீட்டில் இருப்பதாக உமாமகேஸ்வரி மற்றும் ஆயிஷாவிற்கு தெரியவந்தது. 


இதனையடுத்து நேற்று  காலை 9.30 மணிக்கு உமாமகேஸ்வரி, ஆயிஷா ஆகியோர்  வெள்ளிப்பாளையத்தில் உள்ள மனோஜின் தாயார் வீட்டுக்கு சென்றனர். அங்கு வீட்டில் இருந்த அவரது தாயார் ராணியிடம் மனோஜ் எங்கே என்று கேட்டதாக தெரிகிறது. 

அப்போது ராணிக்கும், உமாமகேஸ்வரி, ஆயிஷா ஆகியோருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இந்த நிலையில் விரக்தியடைந்த நிலையில்  2 மனைவிகளும் சாணி பவுடரை (விஷம்) குடித்து விட்டனர். 


உடனே அக்கம், பக்கத்தினர் ஆம்புலன்ஸ் மூலம் இரண்டு பேரையும் மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

இது குறித்து மேட்டுப்பாளையம்  போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் அங்கு சென்று விசாரணை செய்து வருகின்றனர்.

3-வது திருமணத்துக்கு முயன்ற டிரைவர் வீட்டு முன்பு அவரது மனைவிகள் 2 பேர் விஷம் குடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story