மாணவி பலாத்காரம்; தொழிலாளி கைது


மாணவி பலாத்காரம்; தொழிலாளி கைது
x
தினத்தந்தி 23 April 2021 9:48 PM IST (Updated: 23 April 2021 9:48 PM IST)
t-max-icont-min-icon

மாணவியை பலாத்காரம் செய்த தொழிலாளி கைது செய்யப்பட்டாா்.

விழுப்புரம், 

விழுப்புரம் அருகே உள்ள திருப்பச்சாவடிமேடு பகுதியை சேர்ந்த 15 வயதுடைய மாணவி, கொண்டங்கியில் உள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். 

சம்பவத்தன்று விழுப்புரம் அருகே சூரப்பட்டை சேர்ந்த தேவராசு (53) என்ற செங்கல் சூளை தொழிலாளி, மாணவியின் தாயை செங்கல் சூளைக்கு வேலைக்காக அழைக்க வந்தார். அப்போது மாணவியின் தாய், வீட்டில் இல்லை. மாணவி மட்டும் தனியாக இருப்பதை அறிந்த தேவராசு, அம்மாணவியை தாக்கியதோடு வீட்டின் பின்புறம் வலுக்கட்டாயமாக அழைத்துச்சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.


இதுகுறித்து மாணவி, தனது பெற்றோரிடம் கூறி அழுதார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர், இதுபற்றி விழுப்புரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். 

புகாரின்பேரில் தேவராசு மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Next Story