மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது


திருடிய வாலிபர் கைது
x
திருடிய வாலிபர் கைது
தினத்தந்தி 23 April 2021 10:01 PM IST (Updated: 23 April 2021 10:01 PM IST)
t-max-icont-min-icon

மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது

அன்னூர்

அன்னூர் அருகே  குன்னத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் தர்மேந்தர். இவர் கடந்த பிப்ரவரி மாதம் அன்னூர் மாணிக்கம்பாளையம் மேட்டுக்கடை அருகே தனது மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு கடைக்கு சென்றுள்ளார். 

திரும்பி வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை காணவில்லை. இதுகுறித்து தர்மேந்தர் அன்னூர் போலீசில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து போன மோட்டார் சைக்கிளை தேடி வந்தனர். 

இந்த நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ராமநாதபுரம் மாவட்டத்தில் தலைக்கவசம் அணியாதவர்களை நிறுத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து அபராதம் விதித்தனர். அப்போது தனது மோட்டார் சைக்கிளுக்கு அபராதம் விதித்துள்ளதாக தர்மேந்தருக்கு குறுஞ்செய்தி வந்துள்ளது. 

இது குறித்து தர்மேந்தர் கொடுத்த தகவலின் அடிப்படையில் அன்னூர் குற்றப்பிரிவு போலீசார் செல்வராஜ் மற்றும் குருசாமி ஆகியோர் ராமநாதபுரம் போலீசாரிடம்  தொடர்பு கொண்டு பேசினர். 

இது குறித்த தகவலின் அடிப்படையில் மோட்டார் சைக்கிளை திருடியது ராமநாதபுரம் மாவட்டம் கட்டியனேந்தல் பகுதியைச் சேர்ந்த மகாலிங்கம் என்பவரின் மகன் முரளிதரன் (24) என்பதும், டிப்ளமோ மெக்கானிக்கல் படித்துவிட்டு கோவை அன்னூர் மாணிக்கம்பாளையம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் வேலை பார்த்த போது மோட்டார் சைக்கிளை திருடி சென்றதும் தெரியவந்தது. 
இதுகுறித்து அன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து முரளிதரனை கைது செய்து மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்துள்ளனர்.

Next Story