முழுஊரடங்கின்போது நோன்பு கஞ்சி வழங்க கோரிக்கை


முழுஊரடங்கின்போது நோன்பு கஞ்சி வழங்க கோரிக்கை
x
தினத்தந்தி 23 April 2021 10:01 PM IST (Updated: 23 April 2021 10:01 PM IST)
t-max-icont-min-icon

முழுஊரடங்கின்போது நோன்பு கஞ்சி வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

கீழக்கரை, 
கொரோனா பரவல் காரணமாக முழு ஊரடங்கு ஞாயிற்றுக் கிழமைகளில் கடைபிடிக்கப்பட உள்ளது. இதுகுறித்த நடைமுறை பற்றி ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் உத்தரவின்பேரில் கீழக்கரை நகராட்சி அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என்பதால் சனிக்கிழமை அன்று பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு கடைகளில் கூட்டம் கூடுவதை கட்டுப் படுத்துவது குறித்தும், ஞாயிற்றுக்கிழமை பள்ளிவாசல்களில் தொழுகை நடத்துவது குறித்தும் ஆலோசனை வழங்கப்பட்டது. இதில் நகராட்சி பொறுப்பு ஆணையாளர் பூபதி தலைமையில் நகராட்சி ஊழியர்கள் மற்றும் அனைத்து ஜமாஅத் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் வணிக வியாபார சங்கத்தினர் கலந்துகொண்டனர். இதுகுறித்து கீழக்கரை நுகர்வோர் சங்க செயலாளர் செய்யது இப்ராகிம் கூறியதாவது:- 
நோன்பு காலத்தில் நோன்பு திறப்பதற்காக வேண்டி அனைத்து பள்ளிவாசல்களிலும் நோன்பு கஞ்சி வழங்குவது வழக்கம்.  இதனை அனைத்து சமுதாய மக்களும் வாங்கி பயன் பெறுகின்றனர். அதேபோல் கொேரானா காலங்களிலும் சமூக இடைவெளியை பின்பற்றி அனைத்து சமுதாய மக்களுக்கும் நோன்பு கஞ்சி மாலை 4 மணி முதல் 4.30 மணி வரை வினியோகம் செய்து வருகின்றனர். முழு ஊரடங்கின் போது  உணவகங்களுக்கு அரசு நேரம் ஒதுக்கியது போல சமூக இடை வெளியுடன் நோன்பு கஞ்சி வழங்குவதற்கும் நேரம் ஒதுக்க வேண்டும். அதனை தடையின்றி வழங்க மாவட்ட கலெக்டர் உத்தரவிட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story